Pages

Wednesday, August 18, 2010

தீர்வு: நெருப்பு நரியில் சில தமிழ்வலைபூக்களில் தமிழ் சரியாகத் தெரிய...

உபுண்டு நெருப்பு நரியில், சில வலைபூக்களில் தமிழ் சரியாகத் தெரியாமல் இருக்கும். அதற்கு,

௧. நெருப்பு நரியில், Edit -> Preferencesல் மேலே, Content என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

௨. பின்னர் எழுத்துருவை Lohit Tamil என மாற்றிக் கொள்ளவும்.


௩. Advanced என்பதன் மீது சொடுக்கவும். இப்போது புதிதாக ஒரு சாளரம் தோன்றும் அதில் Allow Pages to use their own fonts, instead of my selection above என்பது தேர்வு செய்யப்பட்டிருக்கும். அதனை நீக்கிவிட்டு Okவினை சொடுக்கி, சாளரத்தை மூடிவிடுங்கள்.


௪. அவ்வளவுதான். தமிழ் அழகாகத் தெரியும் :-)

௫. பின்னர், இதனை வேண்டாம் என்று தாங்கள் விரும்பினால், வலைபூவைப் படித்து முடித்தபின்னர் மேற்சொன்ன வழிமுறையைப் பயன்படுத்தி திருத்திக் கொள்ளலாம்.

௬. இது பிரச்சனைக்கான சரியான தீர்வுதான். ஆனால் சிறந்த தீர்வல்ல. சிறந்த தீர்வு, Arial எழுத்துருவுக்கு பதிலாக மட்டும் Lohit Tamil எழுத்துருவை மாற்றுவது. எப்படி என யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.
.

6 comments:

suthanthira.co.cc said...

இதைத்தான் இவ்வளவு நாளாக தேடிக்கொண்டு இருந்தேன். நன்றி. கூகிள் குரோமில் இது எப்படி?

sethupathy said...

குரோமில்,
Options -> Under the Hood -> Change Font and Language Settingsல் நானும் ஏதேதோ மாற்றிப் பார்த்தேன்... ஏதும் வேலை செய்யவில்லை.. :-(

Jayadeva said...

ஐயா, என் ராசா, நீ ரொம்ப நாளைக்கு நல்லா இருப்பா, இத்தனை நாளா நிறைய வலைப் பூக்கள் சரியா தெரியாம என்னைப் பாத்து பல்
இழித்துகிட்டு இருந்திச்சு, நீ சொன்ன யோசனையில இப்ப சூபரா தெரியுதுப்பா, நன்றி.

sethupathy said...

மகிழ்ச்சி.. தலைவா... :-) :-)

விசு said...

தல உண்மையுலேயே சூப்பர் !!!!!!!!!

sethupathy said...

நன்றி விசு. :) :) :)

Post a Comment

Related Posts with Thumbnails