Pages

Monday, August 30, 2010

120 தமிழ் எழுத்துருக்கள், தமிழ் லினக்ஸ் மென்பொருட்கள்



௧. தமிழ் எழுத்துருக்களை இங்கே சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள்

௨. பின்னர் otf.zip என்ற தரவிறக்கப்பட்ட கோப்பின் மீது வலது விசையைச் சொடுக்கி, Extract Here என்பதைத் தேர்வு செய்யவும்.


௩. இப்போது ஒவ்வொரு எழுத்துரு மீதும் இருமுறை சொடுக்கி, அதில் Install என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

௪. பின்னர் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்யுங்கள். அவ்வளவுதான் :-)

௫. இது தவிர கீழ்கண்ட இணைப்புகளிலும் தமிழ் எழுத்துருக்களைத் தரவிறக்க இயலும்

http://www.ildc.in/Tamil/GIST/Version2.0/html/linux01.html
http://www.ildc.in/Tamil/GIST/htm/otfonts.htm
http://www.ildc.in/Tamil/GIST/htm/modular-otfonts.htm

தமிழில் ஓப்பன் ஆஃபிஸ், நெருப்புநரி, தன்டர்பேர்ட் பெற இங்கே சொடுக்கவும்.

௧. மேற்சொன்னது போன்றே Extract here என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

௨. இப்போது மூன்று அடைவுகள்(folders) இருக்கும்.

௩. ஒவ்வொன்றிலும், install.sh என்ற கோப்பு இருக்கும். root ஆக login செய்து இந்த கோப்பின் மீது இருமுறை சொடுக்கவும்.

௫. அல்லது முனையத்தில்

$ sudo -i

$ cd openoffice_folder_name
$ ./install.sh
$ cd ..


$ cd firefox_folder_name
$ ./install.sh
$ cd ..


$ cd thunderbird_folder_name
$ ./install.sh
$ cd ..


என்ற கட்டளைகளை நிறைவேற்றவும்.
குறிப்பு: sudo -i என்ற கட்டளை, root ஆக login செய்ய.


கவனம்: 
   தமிழ் எழுத்துருக்களை நான் நிறுவிப்பார்த்தேன் நன்கு வேலை செய்கிறது. ஆனால், நெருப்புநரி, ஓப்பன் ஆஃபிஸ், தன்டர்பேர்ட் இவற்றை நான் நிறுவிப் பார்க்கவில்லை. மேற்குறிப்பிட்ட கட்டளைகள், http://www.ildc.in/Tamil/GIST/Version2.0/html/linux02.html என்ற இந்திய அரசின் தளத்தில் கொடுத்ததற்கு ஏற்ப உள்ளது. நான் நிறுவி சரிபார்க்கவில்லை.

.

8 comments:

suthanthira-ilavasa-menporul.com said...

மிக்க நன்றி. இந்த மாதிரி அடிப்படை விஷயங்கள்கூட தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.

sethupathy said...

பலபேரில் நானும் ஒருவன்... :-P.. இதற்கு முன் வரை root ஆக login செய்து, font folderஐத் தேடிப் பிடித்து, fontஐ paste செய்து கொண்டிருந்தேன்.
உபுண்டுவுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை கண்டறிவதே பெரிய வேலை....

இரா.குமரேசன் said...

Good post,

sethupathy said...

ஊக்கத்திற்கு.. மிக்க நன்றி :-)

சுப.தமிழினியன் said...

தோழா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஃபாண்டின் மீதும் வைத்து இன்ஸ்டால் செய்ய என்னைப் போன்ற கேவலமான சோம்பேறிகள் தயங்குவோம், அதற்காக இல்ல அடைவினுள் சென்று .fonts அடைவினுள் எல்லா எழுத்துருக்களையும் இணைத்துவிடுவேன். என்னைப் போன்றவர்களுக்காக :-) உபயோகப்படட்டும்.

sethupathy said...

நன்றி தமிழினியன் :-)

ந.ர.செ. ராஜ்குமார் said...

இந்த எழுத்துருக்கள் ஒருங்குறி(யுனிகோட்) எழுத்துருக்களா?

sethupathy said...

ஆமாம்... ஆமாம் :-)
பல எழுத்துருக்களை நிறுவி.. அலுத்துப் போய்.. நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தது.
லிக்சுக்கென்றே அரசால் தயாரிக்கப்பட்ட எழுத்துருக்கள் என நினைக்கிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails