Pages

Friday, August 13, 2010

Desktop தோற்றத்தை விண்டோஸ் போல் மாற்ற...

அனைவரும் விண்டோசிலிருந்தே உபுண்டுவுக்கு மாறியிருப்போம். எனவே desktop விண்டோஸ் போன்று தோற்றமளித்தால் கையாள்வதற்கு எளிதாக இருக்கும். அதற்கு,

௧. கீழே இருக்கும் Panel மீது வலது விசையை சொடுக்கி, 'delete this panel' என்பதைத் தேர்வு செய்து நீக்கிவிடுங்கள்.

௨. மேலே இருக்கும் Panelல் மீது வலது விசையைச் சொடுக்கி, 'Properties' என்பதைத் தேர்வு செய்து 'Orientation'ல் Bottom என்பதைத் தேர்வு செய்யவும்.



௩. தற்போது Panel கீழே வந்திருக்கும். Applications மீது வலது விசையைச் சொடுக்கி, 'Remove from Panel' என்பதைத் தேர்வு செய்யவும்.

௪. மீண்டும் Panelன் மீது வலது விசையைச் சொடுக்கி, Add to Panel என்பதைத் தேர்வு செய்யது. அதில், 'Main Menu' என்பதைத் தேர்வு செய்து Add என்பதைச் சொடுக்கவும்.


௫.  பின்னர் இதே போன்று Add to Panel மூலம் 'Window List' என்பதை சேர்த்துக் கொள்ளவும்.

௬. பின்னர் இதே போன்று Add to Panel மூலம் 'Show Desktop', 'Shut Down' போன்று தேவையானவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

௭. மேலும் panelல் உள்ள desktop icon மீது வலது விசையைச் சொடுக்கி, Move என்பதைத் தேர்வு செய்து, Panelன் வலது மூலையில் வைத்துவிட்டால் முடிந்தது.

௮. மேலும் தங்களது திரை அகலமானதா இல்லை உயரமானதா என்பதைப் பொறுத்து. இன்னொரு Panelஐ, தற்போது இருக்கும் Panelன் மீது வலது விசையைச் சொடுக்கி New Panelலினைத் தேர்வு செய்து பெறலாம்.
        அகலமாக இருந்தால் Panelல் மீது வலது விசையைச் சொடுக்கி, 'Properties' என்பதைத் தேர்வு செய்து 'Orientation'ல் Right அல்லது Left தேர்வு செய்துகொள்ளுங்கள். உயரமான திரை கொண்டவர்கள், Topஎன்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

௯. இப்போது உள்ள புதிய Panelன் மீது வலது விசையைச் சொடுக்கி, Add to Panel என்பதைத் தேர்வு செய்து, Application Launcherல் தாங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் செயலியைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உபுண்டுவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளுங்கள். :-)

சாளரங்களை வகைப்படுத்தித் தொகுக்க.. (Group the Windows like in Windows 7)
.

9 comments:

seenivasan said...

Brother..Ur idea is super i have changed panel settings today.. i am using ubuntu ultimate edition 2.7..
Some tamil blogs i cant read clear in ubuntu os ..(eg..http://geetharachan.blogspot.com/2010/07/blog-post_27.html).the same problem is in my system when i ws using ubuntu 10.4. If u know any solution pls inform me brother...

sethupathy said...

Sorry.I too don't have any solution. but indirectly...
Copy the post content and paste it in 'gedit'. set the font as 'Lohit tamil'. This is temporary solution.

Blogs which aree using ARIAL fonts having this problem. Unfortunately most of the times the default font is ARIAL. :-(

suthanthira.co.cc said...

//seenivasan said...
Brother..Ur idea is super i have changed panel settings today.. i am using ubuntu ultimate edition 2.7..
Some tamil blogs i cant read clear in ubuntu os ..(eg..http://geetharachan.blogspot.com/2010/07/blog-post_27.html).the same problem is in my system when i ws using ubuntu 10.4. If u know any solution pls inform me brother...//

join that blogs' feed in google reader and there you can read clearly.

suthanthira.co.cc said...

சுதந்திர மென்பொருட்களைப் பற்றி நல்ல படங்களுடன் சிறந்த கட்டுரைகளை எழுதிவருகிறீர்கள். நன்றி.

sethupathy said...

////join that blogs' feed in google reader and there you can read clearly.///
ஆஹா.. அருமையான யோசனை.. மிக்க நன்றி... :-) :-)

sethupathy said...

மேலும் ஒரு யோசனை...
Panel மீது உள்ள நாட்காட்டியின் மீது வலது விசையைச் சொடுக்கி, Preferncesல் Show Date என்பதை நீக்கிவிட்டால், Windows list தெரிவதற்கு மேலும் இடம் கிடைக்கும்.

naresh said...

super website,so far, i have never seen like that software

naresh said...

sir, i have one problem in ubuntu while watching movie ,i couldn't hear the sound.that is big problem in ubuntu eventhough there is secure system , sound is essential in our life.

sethupathy said...

Pls Give more details.. like which version of ubuntu? Only videos no sound?

Post a Comment

Related Posts with Thumbnails