Pages

Monday, August 9, 2010

இயங்கமறுக்கும் நிரல்களை நிறுத்த - Kill Process

௧. நெருப்பு நரியை இயக்கும் போது, "Firefox is alredy running" என்றோ, "Firefox is already open" என்றோ செய்தி வரும்.
௨. சிலசமயம் VLCயோ அல்லது வேறு ஏதேனும் நிரலோ திறக்க மறுக்கும்.
௩. சிலசமயம் செயலி இயங்க மறுக்கும்.
(To view this post in English, click here.)
       இது போன்ற சூழ்நிலையில் கணினியை மறுதொடக்கம்(restart) செய்யத் தேவையில்லை. அதற்கு பதிலாக அந்தச் செயலியை மட்டும் முழுதும் நிறுத்தி மறுதொடக்கம் செய்தால் போதுமானது. அதற்குப் பல வழிகள் உள்ளன.

முனையத்தின் மூலமாக:
முறை 1:   
  $ pkill process_name
     எ.க.   $ pkill vlc

முறை 2:
        $ pgrep process_name
இந்தக் கட்டளை செயலியின் செயற்பாட்டு எண்ணைப் பெற்றுத்தரும்.
    $ kill process_ID 
எ.க.
    $ pgrep vlc
              2715
           $ kill 2715



பயனர் இடைமுகம் மூலம்: (GUI)
முறை 1:
     System -> Administration -> System Monitor செல்லவும். அங்கு Processes என்பதைத் தேர்வுசெய்யவும். இப்போது, உங்களுக்கு வேண்டிய செயலியைத் தேர்வு செய்து End Process என்பதைச் சொடுக்கவும்.
கவனம்: சிலசமயம் இதனை இருமுறை செய்த பின்னர்தான் செயலி நிற்கின்றது.


முறை 2: (புதியவர்கட்கு..)
      Panelன் மீது, வலது விசையைச் சொடுக்கி, Add to Panel என்பதில், Force Quit என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர், Force Quit மீது ஒரு முறை சொடுக்கி, அதன் பின் இயங்க மறுக்கும் செயலியின் மீது ஒரு முறை சொடுக்கினால் அவ்வளவுதான்.
.

9 comments:

போகன் said...

உபுண்டுவை தற்சமயம்தான் பதிவிரக்கினேன்.ஆனால் இணைய இணைப்பில் சில தளங்களுக்கு போகமுடியவில்லை.குறிப்பாக என்னுடைய மென்பொருள் தளத்திற்கே.விண்டோசில் பிரச்சினை இல்லை.சற்று தடுமாற்றமாகதான் உள்ளது.இருப்பினும் சற்றுகாலம் முயற்சி செய்ய விருப்பம்.

sethupathy said...

சில முக்கிய கல்வி வேலைகளுக்குத் தவிர, பிற நேரங்கள் முழுவதும் உபுண்டு பயன்படுத்துகிறேன். தாங்கள் கூறும் பிரச்சனை வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் என்னாலியன்றவரை தங்கள் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்கிறேன். நன்றி.
(மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளேன்.)

Seenivasan said...

Hi brother i am using ubuntu ultimate 2.7
..It gives wonderful experience,
If u know how to run IE8 in ubuntu tell me please

sethupathy said...

There is a way... Install 'WINE' from Ubuntu Software Center and try to install it. It may work. Other than firefox, you can install, Chrome, Seamonkey. Both are matured browsers. Both available in Ubuntu Software Center.
WINE-Emulator- Gives a Windows Compatibility layer to install .exe files.
Thanks.

போகன் said...

நீங்கள் சொன்னது போல இரண்டையும் தரவிரக்கினேன்.ஆனால் பயனில்லை.இப்போது வேறு ஒரு பிரச்சினை முளைத்துள்ளது.விண்டோஸ் உபுண்டு இரண்டிலும் இணையத்தில் நுழைவது சிரமமாகிவிட்டது.சில முறைகள் ரீஸ்டார்ட் செய்தபிறகே நுழையமுடிகிறது,.[பி.கு.மென்பொருள் என்று என் தளத்தின் பெயர் இருந்தாலும் எனது கணினி அறிவு அத்தனை சிலாகியமானதில்லை ]

sethupathy said...

தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி.. (மின்னஞ்சல் பார்க்கவும்)

suthanthira.co.cc said...

I have changed free-gimp.blogspot.com into suthanthira-gimp-inkscape.blogspot.com. fyi

sethupathy said...

நன்று... :-)

sethupathy said...

போகன்-அவர்களுக்கான தீர்வு: (BSNL broadband)
1. //சில தளங்களுக்கு போகமுடியவில்லை..
System -> Preferences -> Network Connectionsல் DSLல் Edit என்பதைத்தேர்வு செய்து, அதில் Wiredல் MTU என்பது automatic என இருக்கும்.
அதை 1492 என்றோ, 1452 என்றோ மாற்றிக் கொள்ளவும். மேலும் பிரச்சனை இருந்தால், http:// என்பதை https:// என்று மாற்றி வலைதள முகவரி கொடுத்துச் செல்லவும்.

2. //சில முறைகள் ரீஸ்டார்ட் செய்தபிறகே நுழையமுடிகிறது...
உபுண்டுவை restart செய்து விண்டோசுக்கு செல்லாமல். Shutdown செய்து ON செய்தால். இந்த பிரச்சனை இருக்காது.

குறிப்பு: MTU மாற்றுவது தவிர பிற தீர்வுகளை-போகனே தேடி கண்டுபிடித்துவிட்டார் :-P

Post a Comment

Related Posts with Thumbnails