இதற்கு மாற்றாக, 0AD வந்துள்ளது. :-)
நிறுவும் வழிமுறை:
முனையத்தைத் திறந்து, கீழ்கண்ட வரிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றவும்.sudo add-apt-repository ppa:wfg/0ad
sudo apt-get update
sudo apt-get install 0ad
நிறைகள்:
௧. விளையாட்டு முறை, அப்படியே AoE போன்றே உள்ளது.௨. AoE போலன்றி, 0AD ஒரு கட்டற்ற இலவச மென்பொருள்.
௩. வரைவியல்(Graphics) AoE3யை விட அற்புதமாக உள்ளது. (கீழே உள்ள கண்ணொளி பார்க்கவும்)
௪. தனியாகவும், பலபேர் சேர்ந்தும், இணையம் மூலமாகவோ, குறும்பரப்பு வலையமைப்பு (LAN) மூலமாகவோ விளையாடலாம்.
குறை:
௧. வெளிவந்துள்ளது Alpha பதிப்பு.மேலும் தகவலுக்கு, http://wildfiregames.com/0ad/page.php?p=13300
.

11 comments:
இது நெட்புக் ரீமிக்ஸில் வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா??
நிச்சயம் வேலை செய்யுமென நினைக்கிறேன்.
முயற்சித்துப் பாருங்கள்... :-)
நான் விளையாடத் துவங்கும் போது, கீழ்கண்ட சிப்பத்தினை நிறுவினால் நல்லது என்று மென்பொருள் எச்சரிக்கை கொடுத்தது. வேண்டுமெனில் தரவிற்க்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
http://launchpadlibrarian.net/12091010/libtxc-dxtn0_0.070518-0.1ubuntu1%7Eppa1_i386.deb
//unable to locate package 0ad// enna seiya?
//unable to locate package 0ad// enna seiya?
கூடிய விரைவில் தீர்வு சொல்ல முயற்சிக்கிறேன்..
nanri
இன்று மறுமுறை உங்களுக்காக.. மீண்டும் நிறுவிப் பார்த்தேன்... பிரச்சனை ஏதுமில்லை...
தங்கள் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை... ஒவ்வொரு வரியையும் முனையத்தில் நிறைவேற்றி, அதன் screenshot முடிந்தால் அனுப்பவும்.
nanri sethupathy, inru meendum install seithan, install aanathu, Application:>games>0ad double click seithal verum blank screen mattume varukirathu. vallu poi kathi vanthathu pole.
என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. தீர்வு கிடைத்தவுடன் சொல்கிறேன்.
பிரச்சனைக்குக் காரணம் pulseaudioவாக இருக்கலாம். நான் alsa பயன்படுத்துகிறேன்.
pulseaudio நீக்க...
http://ubuntu5.blogspot.com/2010/10/1010.html
முலம்:
http://www.wildfiregames.com/forum/index.php?showtopic=12478
thanks sir
i need vice sity game in linux sir pls help.
Post a Comment