உபுண்டுவில் வன்வட்டுகளை ஏற்றம் செய்தவுடன் (hard drive mount) அவை பணிமேடையில் தெரியும். அவற்றை நீக்க வேண்டுமென நினைத்தால்,
௧. முனையத்தைத்(terminal) திறந்து,
$ gconf-editor
என்ற கட்டளையை நிறைவேற்றியவுடன் ஒரு சாளரம் திறக்கும்.
௨. அதில்(இடதுபக்கம்) apps -> nautilus -> desktopஐத் தேர்வு செய்யவும். பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி, volumes visible என்பதன் தேர்வை நீக்கவும். அவ்வளவுதான் :-)
௩. மேலும் உங்களுக்குத் தேவையான படவுருக்கள்(icons) மட்டும் பணிமேடையில்(desktop) இருக்க, computer_icon_visible, home_icon_visible போன்றவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
.
Monday, September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment