நிறுவும் (அ) இயக்கும் வழிமுறை:
௧. தரவிறக்கிய கோப்பை இல்ல அடைவில்(Home Folder) வைத்து அதன் மீது வலது விசையைச் சொடுக்கி, Extract Here என்பதைத் தேர்வு செய்யவும்.
௨. பின்னர் Applications மீது வலது விசையைச் சொடுக்கி, 'Edit Menus' என்பதைத் தேர்வு செய்யவும்.
௩. அதில் Sound and Video என்பதன் மீது சொடுக்கி, பின்னர் வலது ஓரத்தில் உள்ள New Item என்பதன் மீது சொடுக்கவும்.
௪. தற்போது ஒரு சாளரம் திறக்கும். அதில்
Name: Songbird
Command: /home/
(HomeFolderக்கு பதிலாக உங்கள் இல்ல அடைவின் பெயரைக் கொடுக்கவும்.)
மேலும் இடதுபுறத்தில் தெரியும் படவுருவின் மீது சொடுக்கினால் ஒரு சாளரம் திறக்கும், அதில் HomeFolder -> Songbird -> songbird-512.png ஐத் தேர்வுசெய்து கொள்ளவும்.
௫. Ok என்பதை சொடுக்கி, மூடிவிடவும். அவ்வளவுதான். இப்போது
Applications -> Sound & Video -> Songbird என்பதைத் தேர்வு செய்து இயக்கலாம்.
இயக்க:(புதியவர்கட்கு) Songbirdஐத் திறந்து, File -> Import Mediaவில் பாடல்கள் உள்ள Folderஐத் தேர்வுசெய்து Ok கொடுங்கள். அவ்வளவுதான். அனைத்துப் பாடல்களைப் பற்றிய விபரங்களையும் வரிசைப்படுத்திக் காட்டும். (Folderஐத் தேர்வு செய்யவும், பாடல்களை அல்ல)
நிறைகள்:
௧. கண்ணுக்குக் குளிர்ச்சியான பயனர் இடைமுகம்.௨. Media அடைவில் நீங்கள் செய்யும் மாறுதல்களை தானாகவே பார்த்துக் கொள்ளும். அதாவது புதிதாக ஏதாவது அடைவினை சேர்த்தால் தானாகவே பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்.
௩. ZOOM செய்துகொள்ளும் வசதி.
௪. இணைய உலவியும் அதனுடன் சேர்ந்தே உள்ளது.
குறை: விசைப்பலகையின் multimedia விசைகட்குக் கட்டுப்படவில்லை.
.



2 comments:
super. super. super
please contact me if u wish.
தொடர்புகொள்ளவும் என்று சொல்லவும்.
if u wish தேவையில்லை. :-)
மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
Post a Comment