Pages

Wednesday, October 13, 2010

உபுண்டு 10.10 upgrade

File System வட்டில் குறைந்தது 4GB இடம் இருக்க வேண்டும்.

நான் செய்தவை: 
௧. Update Manager முலம் update செய்து கொண்டேன்
௨. பின்னர் அதில் உள்ள Upgrade என்பதைத் தேர்வு செய்தேன். இணைய வேகம் 100 kbps(தரவிறங்கும் வேகம்) க்கு, கோப்புகளைத் தரவிறக்க அது 3 மணி நேரம் எடுத்துக் கொண்டது.
௩. பின்னர் அவற்றை நிறுவ சுமார் 1மணி நேரம் எடுத்துக் கொண்டது.

நிறுவிய பின்னர், எனது File System வன்வட்டில் 2GB அளவே இடம் மீதமிருந்தது. அதற்கு முன்னர் 4.5GB இடம் இருந்தது. எனவே பழைய மென்பொருட்கள், கெர்னல்களை நீக்க, Ubuntu Tweak பயன்படுத்தினேன். Ubuntu Tweak வேண்டுவோர், .deb சிப்பத்தை இங்கே சொடுக்கி, தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



௧. இடது புறத்தில் Package Cleanerஐத் தேர்வு செய்து கொள்ளவும்.

௨. முதலில் கீழே உள்ள Unlockன் மீது சொடுக்கி Unlock செய்து கொள்ளவும். பின்னர் வலது புறத்தில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகத் தேர்வு செய்து. Select All செய்து, Clean up என்பதைச் சொடுக்கி, நீக்கிக் கொள்ளலாம்.


மென்பொருள் மூலங்களைப் புதுப்பிக்க விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

.

11 comments:

Prasanna Rajan said...

உபுண்டு 10.10 ஸ்டேபிள் வெர்ஷனை உபயோகித்து பார்த்தேன். எக்கசக்க பக்குகள். அதிலும் நெட்புக் லான்ச்சருடன், பெப்ரவரி மாதம் அவர்கள் அறிமுகம் செய்த யுனிட்டியை இணைத்து இருந்தனர். ஒரு முறை அப்டேட் செய்து நெட்புக் எடிஷன் அமர்வுக்குள் நுழைந்தால் வெறும் வால்பேப்பர் மட்டுமே இருந்தது. இந்த பக்கை உபுண்டு ஃபோரத்தில் பதிவிட்டேன்.

வெறும் நோம் அமர்வை பயன்படுத்தி கொண்டு இருப்பதை விட உபுண்டு 10.04க்கு தாவி விடலாம் என்று மாற்றி விட்டேன். மேலும் 10.10இல் மற்றொரு மட்டமான அம்சம், மட்டர் (Mutter).

bogan said...

There seems to be some problem with seeing you tube like sites in full screen also ...

sethupathy said...

தீர்வு:
எனக்கும்..Full screen கொடுக்கும் போது.. video ஓடவில்லை..
full screenலிருந்து மீண்டும் பழைய நிலைக்கு மீளும் போது video ஓடியது.
***மீண்டும் full screen கொடுத்த போது video ஓடுகிறது.*** தாங்களும் ஒரு முறைக்கு மேல் முயற்சித்துப் பார்க்கவும்.

நிரந்தரத் தீர்வு:

sudo mkdir /etc/adobe

sudo su

sudo echo \"OverrideGPUValidation = 1\" >> /etc/adobe/mms.cfg

மேற்கண்ட வரிகளை terminalல் ஒவ்வொன்றாக நிறைவேற்றவும்.
மூலம்: http://ubuntuforums.org/showthread.php?t=1593363&page=2

sumus said...

வணக்கம்,
என்னிடம் HP Scanjet 2400 Scaner உள்ளது. உபுண்டு 10.10 மற்றும் Pinguy Os எதிலும் அது வேலை செய்ய வில்லை உபுண்டுக்கு ஏற்ற டிரைவர் எதுவும் உள்ளதா தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.

sethupathy said...

@sumus

http://cosminswiki.com/index.php/Install_HP_Scanjet_2400_in_Ubuntu_9.04
மன்னிக்கவும் இதுதான் கிடைத்தது. முயற்சித்துப் பார்க்கவும்.
ELCOT Linux Drivers இணைப்பு வேலை செய்யவில்லை... :(

sumus said...

நன்றி நண்பா இது வேலை செய்யுமா?

http://www.mediafire.com/download.php?0s3bkmkb3rt

peru.raja@gmail.com
உதவிக்கு நன்றி

sethupathy said...

முயற்சித்துப் பார்க்கவும்.. என்னிடம் scanner இல்லை. எனவே என்னால் சரி பார்க்க இயலாது. :(

sumus said...

நன்றி நண்பரே,
என்னிடம் 80GB வன்வட்டு ஒரே பார்டிசன் NTFS ஆக உள்ளது, இதில் Windows xp நிறுவி உள்ளேன். இதில் 50GB க்கு கோப்புகள் உள்ளன. இதில் உள்ள கோப்புகளை அழிக்காமல் இந்த பார்டிசனில் உபுண்டு அல்லது Pinguyos நிறுவ வேண்டும் ஏதேனும் வழி இருந்தால் கூறவும்.
நன்றி.

sethupathy said...

ஆம் வழி உள்ளது. :) இது போல பிரித்து தான் நான் நிறுவியுள்ளேன்.
Sorry :(
commentsல் போட இடம் இராது. தனி பதிவாகவே இடுகிறேன்.

sumus said...

மிக்க நன்றி
தங்களின் பதிவுக்காக காத்திருக்கும் மாணவன்.

sethupathy said...

@ sumus

பதிவு எழுதியுள்ளேன் சந்தேகமிருப்பின் கேட்கவும். :)

Post a Comment

Related Posts with Thumbnails