சாதாரணமாக உபுண்டுவை விண்டோசுக்கு வெளிய நிறுவ, ஒரு முழு வன்வட்டின் பகுதியையும் (hard drive partition) அழித்து பின் நிறுவுவோம். ஆனால் அதற்கு பதிலாக வன்வட்டின் சிறுபகுதியை மட்டும் பிரித்து அதில் நிறுவினால் போதுமானது.
எ.க. 80GB இடத்தில் 40GB இடம் மீதமிருப்பின், அதில் 20GBயை மட்டும் தனியே பிரித்து, உபுண்டு நிறுவிக் கொள்ளலாம்.
1. அதற்கு, உபுண்டு குறுந்தகட்டை(CD) boot செய்து, Try Ubuntu (without making any changes to your computer) என்பதைத் தேர்வு செய்யவும்.
2. உபுண்டுவின் பணிமேடை(Desktop) தோன்றியவுடன் System -> Administration -> Gparted partition Editor என்பதைத் தேர்வு செய்யவும்.
௩. பிரிக்க வேண்டிய hard drive partition மேல் ஒரு முறை சொடுக்கி, பின்னர் Partition -> Resize/Move என்பதைத் தேர்வு செய்யவும்.
௪. Free Space Following என்பதில், உபுண்டுவுக்கு வேண்டிய MB அளவைக் கொடுக்கலாம் அல்லது, படத்தில் உள்ளது போன்று அம்புக்குறி மீது சொடுக்கியும் பிரிக்கும் அளவைத் தேர்வு செய்யலாம்.
௫. தேர்வு செய்தபின், Resize/Move என்பதைத் தேர்வு செய்யவும். அவ்வளவுதான். இட அளவைப் பொறுத்து ஒரு மணிநேரமோ அரை மணிநேரமோ கூட ஆகலாம். பின்னர் அந்த வன்வட்டுப் பகுதியை ext4ஆக format செய்யவும்.
௬. அவ்வளவுதான். பின்னர் உபுண்டு நிறுவும் போது, Specify partition manually என்பதைத் தேர்வு செய்து, அதில் நாம் இப்போது பிரித்த வன்வட்டுப் பகுதிக்கு, Format என்பதை tick செய்யவும். Mount point க்கு " / " என்பதைத் தேர்வு செய்து. Forward என்பதை சொடுக்கவும்.
சாதாரணமாக உபுண்டு நிறுவுவதில் சந்தேகம் இருந்தால், நண்பன் இரா.கதிர்வேலின் pdf கோப்பினை இங்கே சொடுக்கிப் பார்க்கவும். (GNU/Linux கட்டற்ற மென்பொருள்)
.
Thursday, October 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)




4 comments:
நான் இதை ஒரு முறை உபுண்டு நிறுவிய பின்னர் முயன்றேன், [விண்டோசும் இருந்தது]. பார்டிசன்களின் அளவை மாற்றி Apply எனக் கொடுத்தேன். பின்னர் reboot செய்தேன், Hard disk மொத்தமும் காலி [Erased, no operating system, both Windows and Ubuntu are finished]. ஆகவே இதை மிகச் சாக்கிரதையாகப் பயன்படுத்தவேண்டும். முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஓ.. அப்படியா... :(
நான் உபுண்டு நிறுவும் போது ஒரு முறை பயன்படுத்தியுள்ளேன்
நன்றி தோழரே.
தகவலுக்கு நன்றி சார்...
Post a Comment