நாம் படம் பார்க்கும்போது, ஒலி அளவை மாற்றவும், படத்தின் சில காட்சிகளை தவிர்க்கவும் தான் அதிகமாக விசைப்பலகையை பயன்படுத்துவோம். VLCல் அதற்கு, Ctrl+Up, Ctrl+down, Ctrl+left, Ctrl+Right முதலிய விசைகள் குறுக்குவழி விசைகளாகப் பயன்படுகின்றன.
இவற்றை, முறையே Up, down, left, Right விசைகளென மாற்றிக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும். அதற்கு, VLCல் Tools -> Preferencesல் Hotkeys என்பதைத் தேர்வு செய்யவும். அதில் Short Backwards Jumpன் Hotkeysக்கு நேர் கீழே இருமுறை சொடுக்கினால், ஒரு சாளரம் திறக்கும், இப்போது, இடது அம்புக்குறி (left arrow) விசையை இருமுறை அழுத்தி, Ok என்பதைத் தேர்வு செய்யவும்.
இதே போன்று, Short Forward Jump, Volume Up, Volume Downக்கு, முறையே வலது, மேல், கீழ் அம்புக்குறி விசைகளைத் தேர்வு செய்து, Save என்பதன் சொடுக்கவும்.
VLC இயக்கியை ஒருமுறை நிறுத்திவிட்டு, மீண்டும் இயக்கவும். அவ்வளவுதான்.
இது மட்டுமன்று, தாங்கள் அடிக்கடி பயன்படுத்துபவற்றின், குறுக்கு வழி விசைகளையும் இதே போன்று மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், சில சமயங்களில், கண்ணொளி சரியான அளவு விகிதத்தில் இராது. அப்போது 'A' எனும் விசையை அழுத்தி, வீதத்தை மாற்றிக் கொள்ளலாம்.
(எ.க)
மேலும் உரைத்துணை(subtitle)-தாமதப்படுத்த -H
உரைத்துணை(subtitle)-வேகப்படுத்த - G
ஒலியை தாமதப்படுத்த - K
ஒலியை வேகப்படுத்த - J
மேலும் குறுக்குவழிகள் பற்றித் தெரிந்துகொள்ள, Tools -> Preferencesல் Hotkeys.
VLCயினை Windows Media Player போல், Winamp Media Player போல் தோற்றமளிக்கச் செய்ய மற்றும் பல்வேறுவிதமாக தோற்றமளிக்கச் செய்ய, மெல்லுரைகள் பல உள்ளன. அவற்றை இங்கே http://www.videolan.org/vlc/skins.php சென்று தரவிறக்கி ப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
.



2 comments:
Thanks sir...
sir ah??? நானும் student தான் :-) :-) :-)
Post a Comment